ஒரே நாளில் தேர்தல்: மே.வங்க கட்சிகள் வரவேற்பு
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளத்தின் 294 சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்சனிக்கிழமை அறிவித்தது.
அனைத்து தொகுதிகளிலும் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல்முடிந்து மே மாதம் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.
தேர்தலின் போது நடைபெறும் தில்லுமுல்லுகளை தவிர்க்க அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்டகட்சிகள் கோரி வந்தன.
அதற்கேற்ப தேர்தல் ஆணையமும் மே மாதம் 10ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனை பா.ஜ.க.,மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் வரவேற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும், அக்கட்சியும் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என கோரி வந்தது.
ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் அனில் பிஸ்வாஸ், அடுத்த வாரமேதேர்தல் என அறிவித்தால் கூட அதனை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது என கூறினார்.
சட்டமன்ற தேர்தலோடு மித்னாப்பூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இந்திரஜித் குப்தா மறைந்ததை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
யு.என்.ஐ.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications