எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு 3 தொகுதிகள்: கருணாநிதி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. அவர்கள்கேட்ட தொகுதியைக் கொடுக்க முடியாது என்று திமுக தரப்பு கூறி விட்டது. இதனால் கட்சி பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு மிகுந்த அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், மதிமுக வெளியேற்றத்தையடுத்து எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு மவுசு கூடியது. அவர்கள் கேட்கும் 3தொகுதிகளைத் தருவதாக திமுக தரப்பு பச்சைக் கொடி காட்டியது. மதிமுக பின்னால், திருநாவுக்கரசு போய் விடக்கூடாது என்ற பயத்தால் உடனடியாக அவரது கோரிக்கைக்கு திமுக தலையாட்டியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டியில்,அறந்தாங்கி, நாகர்கோவில், திருவாடானை ஆகிய தொகுதிகளில் எம்.ஜி.ஆர். அதிமுக போட்டியிடும்.
15 ஆண்டு காலமாக எனது நண்பராகவும், எனது விருப்பத்திற்கேற்ப சபாநாயகராகவும் இருந்த தமிழ்க்குடிமகன்அதிமுகவில் சேர்ந்துள்ளது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.
திமுகவிலிருந்து யார் விலகி அதிமுகவிற்குச் சென்றாலும் அவர்களைக் கொண்டு, ஸ்டாலினைமையப்படுத்துவதாக அறிக்கை விடச் சொல்வது ஜெயலலிதாவின் வழக்கம் என்றார் கருணாநிதி.
திமுக கூட்டணியில் திமுக, பா.ஜ.க. தவிர பிற கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளாக உள்ளதே என்ற கேள்விக்கு,நீங்கள் பெரிய பத்திரிகை செய்தியாளரா, அல்லது சிறிய பத்திரிகை செய்தியாளரா என்று கேட்ட கருணாநிதி,எப்படி எல்லா செய்தியாளர்களையும் சமமாக அமர வைத்து கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேனோ அதுபோலத்தான் அனைத்துக் கட்சிகளையும் பாவிக்கிறேன் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications