கிளி பிடிக்கச் சென்று உயிரிழந்த சிறுவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிளி பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மரத்தில் ஏறிய 16 வயது சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்தார்.

சென்னையின் புறநகர் பகுதியான சர்மா நதரில் வசித்து வந்தவர் ராஜா (வயது 16). இவர் தச்சு வேலை செய்துவந்தார். புதன்கிழமை இவர் வீட்டிற்கு அருகே இருந்த மரத்தில் அழகான கிளி ஒன்று அமர்ந்திருப்பதை கண்டார்.

அந்த கிளியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற தன் ஆவலை கட்டுப்படுத்தப்பட முடியாமல், கிளிஅமர்ந்திருந்த மரத்தின் மேல் ஏறினார்.

ஆனால் அவர் மரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார் அவர் உடனடியாக சிகிச்சைகாக அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

சாலை விபத்தில் 4 பேர் பலி:

சிவகங்கை மாவட்டம், காட்டுக்குடியிருப்புக்கு அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு வேன்ஒன்று பயணிகளுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது.

அந்த வேன் திடீரென்று எதிர்பாராத விதமாக தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 31 பேர் ராஜாஜி அரசுபொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+