கட்சி மாறியாக ஆகி களங்கப்பட்ட தமிழ்க்குடிமகன்
சென்னை:
கட்சி மாறியாக ஆகி களங்கப்பட்டு விட்டீர்களே என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு தமிழ்அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுகவுக்கு மாறி சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்தமிழ்க்குடிமகன். தற்போது திமுகவைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் தமிழ்க்குடிமகனுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமான், மேத்தா, பேராசிரியர் பொன்.செல்வகணபதி, கருவை.பழனிச்சாமி, முனைவர்வேலுச்சாமி, மா.சு.சம்பந்தன், வா. சேதுராமன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
தமிழ்க்குடிமகனின் அறம் பிறழ்ந்த செயலால் தமிழ் உலம் நாணித் தலை குனிந்து நிற்கிறது. கேட்ட தொகுதிகிடைக்கவில்லை என்பதால், கட்சி மாறுவதும், ஏற்றம் கொடுத்த கலைஞரை தூற்றுவதும் எந்த வகையிலும்நியாயமற்றதாகும்.
தமிழ், தமிழன் என்று புழங்குவதெல்லாம் பதவிக்காகத்தான் என்று பிறர் பரிகசிக்கும் நிலையை அவர் உருவாக்கிவிட்டார்.
தமிழ்ப்பற்றைக் காட்டி பதவியைக் கைப்பற்றிய தமிழ்க்குடிமகன் போன்றோர், கொண்ட கொள்கைகளுக்கும் குழிதோண்டியது அநாகரீகமானது.
தன்மானத்திற்கு ஊறு நேர்ந்தது என்று கருதியிருந்தால், அரசியலிலிருந்து விலகி, தமிழ்ப் பணிக்கே தன்னைஅர்ப்பணித்திருக்கலாம். அவ்வாறின்றி, கட்சி மாறியாக ஆகி களங்கபப்ட்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications