ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி முயற்சி: வாழப்பாடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தனது மகன் ஸ்டாலினை தமிழக முதல்வராக்க கருணாநிதி முயல்கிறார் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதாவது:

தே.ஜ. கூட்டணியில் பா.ஜ.க. வையும், தி.மு.க.வைத் தவிர யாருமே இல்லை. உண்மையான அனைத்து கூட்டணிகட்சிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. இதனால் தமிழகத்தில் தி.மு.க. தலையிைல் அமைந்துள்ள கூட்டணியைதே.ஜ. கூட்டணி என கூற முடியாது.

கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்க முயல்கிறார். தே.ஜ. கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.ரா.கா.,ம.தி.மு.க. பேன்ற கூட்டணி கட்சியினரை கருணாநிதி மரியாதை குறைவாக நடத்தினார். இதை பா.ஜ.க.தலைவர்கள் கண்டு கொள்ளவிலை.

கருணாநிதி ஊழலற்ற நேர்மையான ஆட்சி தருவோம் என கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ஊழல்செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கண்ணப்பனுடனும், தமிழர் பூமி தலைவர் கு.ப. கிருஷ்ணனுடனும் கூட்டணிஅமைத்திருக்கும் போது கருணாநிதியால் எவ்வாறு ஊழலற்ற ஆட்சி தர முடியும் என்று கூறுவது வேடிக்கையானது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது கூட்டணி கட்சியினரைமரியாதையுடன் நடத்தினார். இப்போது மீண்டும் அவர் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சி தலைவரைமரியாதை குறைவாக நடத்தி தன் சுயரூபத்தை காட்டி வருகிறார் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+