யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: த.தே.க. தலைவர் யூகம்

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

அதிமுக - திமுக இரு அணிகளுக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என்பதே 3 வது அணி அமைத்ததன்நோக்கம் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்தேசியக் கட்சியின் தலைவர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

மக்கள் ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும். இந்த தேர்தலில்அதிமுக- திமுக இரு அணிகளுக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காது.

அவ்வாறு தனி மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என்பது தான் 3வது அணியின் நோக்கம். குறைந்த பட்சம் எங்கள்அணியைப் பொருத்தவரை 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக போட்டியிடும் 14தொகுதிகளில் தமிழ் தேசியக் கட்சி நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதிமுக அணியில் இணைய மக்கள் தமிழ் தேசத்திற்கு அழைப்பு வந்தது. ஓ.எஸ் மணியன் இதற்கு தூது வந்தார்.ஆனால், அந்த அணியில் சேர தமிழ் தேசியக் கட்சி மறுத்து விட்டது.

ஜாதிக் கட்சிகள் உருவாகக் காரணம் அரசியல்வாதிகள் தான். சாதிகளை உடைத்து பல பிரிவுகளை உருவாக்கியதும்அரசியல்வாதிகள் தான். தமிழகம் முழுவதும் எங்களது இயக்கம் 4 ஆயிரத்து 600 கிளைகளைக் கொண்டுள்ளது.தேர்தல் அறிக்கை குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

சாதி,மத, மொழி, இன அடிப்படையிலான சிறுபான்மையின மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தான்3வது அணியை துவக்கியுள்ளோம்.

எங்களது 35 கட்சி மக்கள் ஜனநாயகமுன்னணியினர் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. சேலத்திலும்,கோவையிலும் இந்த மாநாடு நடக்கும். தேவகவுடா, வி.பி சிங் ஆகியோரைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+