தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: எம்.எஸ்.கில்
டெல்லி:
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் விதிமுறைகளை மீறும்அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல்ஆணையர் எம்.எஸ்.கில் மத்திய தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கூறியதாவது:
அசாம், கேரளா, மேற்குவங்காளம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத்தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் விதிமுறைகளைக்கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் விதிமுறைகள் படி, மிகப்பெரிய கட் - அவுட்டுக்கள் வைக்கக் கூடாது. தேர்தலுக்காக அநாவசியமாகபணத்தை செலவு பண்ணக் கூடாது. அலங்கார வளைவுகள் வைக்கக் கூடாது.
5 மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் முழுவதும்மின்னணு வாக்குப்பதிவு மூலமே தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கமுயல்பவர்கள் மீது தேர்தல் பார்வையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திங்கள்கிழமை நடந்தஇந்தக் கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications