தமிழ் பெண்கள் கற்பழிப்பு: யாழ்ப்பாணத்தில் போராட்டம்
யாழ்பாணம்:
இலங்கை கடற்படையினரால் இரு இளம் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து யாழ்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை கறுப்பு பட்டை அணிந்து வந்து தங்களது கண்டனத்தைத்தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தின் வாசலிலும் மாணவர்கள் கறுப்புக் கொடி ஏற்றினர்.
மன்னார் பகுதியில் இந்த கற்பழிப்புகள் நடந்துள்ளன. இது குறித்து விசாரணைக்கு இலங்கை அரசுஉத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சுமார் 3,000 பெண்கள் மன்னார் பகுதியில் போராட்டமும் நடத்தினர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும் அதிபர் சந்திரிகாவுக்கு இந்தப் பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மன்னார் பகுதியின் கத்தோலிக்க பிஷப் ராயப்பு ஜோசப் தான் இந்தக் கற்பழிப்பு சம்பவத்தை வெளியிட்டார்.ஆனால், இதை கடற்படை மறுக்கிறது.
கடந்த மாதம் 19ம் தேதி இரு தமிழ்ப் பெண்களை புலிகள் என நினைத்து விசாரணைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால், முறைகேடாக நடக்கவில்லை எனவும் கூறுகிறது.
ஆனால், இதை நம்ப யாரும் தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications