சென்னையில் சமையல்காரரால் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
சென்னை:
19 நாட்களுக்கு முன் கடத்ததப்பட்ட சிறுவனை சென்னை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
வடக்கு சென்னை, செம்பியம் அருகே ஃபாஸ் ஃபுட் ஹோட்டல் நடத்தி வருபவரின் இரண்டரை வயது மகன்கிரண்குமார். கிரண்குமாரின் தந்தை நடத்தி வந்த ஹோட்டலில் வேலை செய்து வந்தவர் சமையல்காரர்ராஜேஷ்கன்னா (வயது 32).
இவர் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கிரண்குமாரை கடந்த மாதம் 20ம் தேதி கடத்திச் சென்றார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தார் கிரணின் தந்தை. ராஜேஷ்கன்னாவிற்கு வலை விரித்த போலீசார் அவரைவேலூரில் கைது செய்தனர்.
இவர் போலீசில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி டெல்லி சென்று சிறுவனை மீட்டு வந்த போலீசார், அவரைபெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ராஜேஷ்கன்னா கிரண்குமாரை பல நகரங்களுக்கும் கூட்டிச் சென்று பின் டெல்லி, ஆக்ராவில் இருக்கும் தாஜ் கஞ்ச்அவுட்போஸ்டில் விட்டுவிட்டு ஹைதராபாத் வந்தார். கிரண்குமாரை மீட்க வேண்டுமென்றால் ரூ 50,000 தரவேண்டும் என கிரண்குமாரின் தந்தைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.
ராஜேஷ்கன்னாவை தேடிய போலீசார் இவரை வேலூரில் கைது செய்தனர். இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். ராஜேஷ்கன்னா பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
ராஜேஷ்கன்னாவை தேடி கண்டுபிடித்த 14 போலீசாருக்கு சிறப்பு விருதும், 3 இன்ஸ்பெக்டர்களுக்கு வீர தீரசெயலுக்கான விருதும் வழங்கப்படும் என போலீஸ் கமிஷனர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
19 நாட்கள் கழித்து தங்கள் குழந்தையை கண்ட பெற்றோர்கள் குழந்தையை கட்டித் தழுவி கண்ணீர் விட்டதுகாண்பவரை நெகிழச் செய்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications