மதிமுகவுக்காக பிரசாரம் செய்ய தயார்: பாஜக அறிவிப்பு
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாவிடம் மதிமுக ஆதரவு கேட்டால், அந்தக்கோரிக்கையை பரிசீலனை செய்வோம் என கோவையில் கிருபாநிதி தெரிவித்தார்.
பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு விமானம்மூலம் செல்ல கோவை வந்தார்கிருபாநிதி. விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்கூறியதாவது:
நாங்கள் மதிமுகவிற்கு எதிரானவர்கள் அல்ல. எங்களை நேசிப்பவர்களுக்கு நாங்கள்நேசக்கரம் நீட்டுவோம். யாருடனும் எங்களுக்கு பகை இல்லை. கோவையில் ஏப்ரல்14ம் தேதி நடக்கும் மதிமுக மாநாட்டிற்கு இதுவரை எங்களுக்கு அழைப்பு இல்லை.
இன்னும் ஓரிரு நாளில் எங்களுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை ஏற்று கலந்து கொள்வோம். மதிமுக - திமுக இருஅணிகளும் ஒரு அணியில் இன்று இல்லை. இன்னும் தேர்தல் வர காலம் உள்ளது.அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெங்களூர் மாநாட்டில் திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு கருணாநிதிக்கும் வைகோவிற்கும் இடையே ஏற்பட்டகருத்து வேறுபாடு கூட ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு காரணம்இருக்கலாம்.
திமுகவிலிருந்து தமிழ்குடிமகன் விலகிச் சென்றது குறித்து நான் கருத்து எதுவும் சொல்லவிரும்பவில்லை. சாதிக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், சாதிப் பெயரை நீக்கி விட்டுத்தான் அந்தக்கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றன.
திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அதிமுக - பா.ஜ.க. மீண்டும் இணைந்துசெயல்பட வாய்ப்பே இல்லை.
ஏனென்றால், அவர்கள் தான் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள். தமிழகத்தில்தெஹல்கா.காம் விவகாரத்தால் எவ்வித பாதிப்பும் இருக்காது. தமிழகத்தில் மீண்டும்திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார் கிருபாநிதி.












Click it and Unblock the Notifications