தி.மு.க. கூட்டணியில் இணையுமா புதிய நீதிக்கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய நீதிக்கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பது குறித்துஅடுத்து நடக்கவிருக்கும் திமுக உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர்கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

புதிய நீதிக்கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகள் கேட்டதாகவும், பாண்டிச்சேரியில் 1 தொகுதி கேட்டதாகவும்பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

திமுகவினர் அழைத்தால் அவர்கள் கூட்டணியில் இணையத் தயார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் பலமுறை திமுக கூட்டணியில்இணையுமாறு புதிய நீதிக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், துணைத்தலைவர் சுதானந்தமும் வேறு மாதிரியே பேசி வந்தார்கள்.

கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியை விட்டு விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை கொங்குவெள்ளாளர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அவர்களுக்கு முதலில் பாலக்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.பின்னர் அவர்கள் கேட்டபடி அதை மாற்றி அவர்கள் கேட்ட பெருந்துறை தொகுதி ஒதுக்கப்பட்டது.

முதலில் கொங்கு வெள்ளாளர் மக்கள் கட்சி தலைவர் கேட்டபடி அவர்களுக்கு பாலக்கோடு தொகுதிகொடுக்கப்பட்டிருந்தது. அது வேண்டாம் என்று அவர்கள் கூறியபின்தான் பெருந்துறை தொகுதிகொடுக்கப்பட்டது. அதுவும் அவர்கள் கேட்டதுதான்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்கு பாண்டிச்சேரியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேலும்தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்கின்றனர். இதுகுறித்து திமுக தேர்தல் குழு உறுப்பினர் ஆர்க்காடு வீராசாமியுடன்,விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தேர்தல் குழு உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என்றார் கருணாநிதி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+