கோவையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தேர்தலுக்கு முன் தலைமறைவாக உள்ள கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகள் 8 பேரை பிடிக்க தீவிரவேட்டை நடந்து வருகிறது. தேர்தலின்போது இவர்களை வைத்து அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்ததிட்டமிட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலையடுத்து இந்த நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த 167 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளில் 8 பேர் மட்டும் இன்னும் பிடிபடாமல், இருந்து வருகின்றனர்.இவர்கள் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுப் போலீசாருக்குத் தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, அபுபக்கர் சித்திக், முஜ்பூர் ரஹ்மான், அயூப் என்ற அஷ்ரப் அலி, முஸ்தாக்அகமது, முகமது அலி, ஷேக் தாவூது, ராசூல் மைதீன் ஆகிய எட்டுப்பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்கள் தமிழகத்தில் எந்த நேரத்திலும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இவர்களைப் பிடிக்கதற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றிய தகவல் அளிக்க ஏற்கனவே பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இவர்களைப் பற்றிய போஸ்டர்கள் படத்துடன் ஒட்டப்பட்டுள்ளது. இவர்களின் நடமாட்டம் இங்குஇருக்கலாம் என்ற நிலையில், போலீஸ் பாதுகாப்பும் கோவையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+