2 மணி நேரத்தில் தேர்தல் முடிவு வெளியாகும்: சாரங்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் இயந்திர வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்குகளை எண்ணும்போது தேர்தல்முடிவுகளை 2 மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கிதெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து சாரங்கி ஞாயிற்றுக்கிழமைபொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

சென்னையில் மன்றோ சிலை, காந்தி சிலை, உழைப்பாளர் சிலை, எலியட்ஸ் கடற்கரை, சீரணி அரங்கம் ஆகியஇடங்களில் இயந்திரம் மூலம் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கேட்ட சந்தேகத்துக்கு சாரங்கி பதில் அளித்தார்.

செய்முறை விளக்கத்துக்குப் பிறகு சாரங்கி நிருபர்களிடம் கூறுகையில், வாக்குப்பெட்டியில் வாக்களிப்பதற்குப்பதிலாக இயந்திரம் மூலம் வாக்களிப்பது மிகவும் எளிதாகும். இயந்திர வாக்குப்பதிவு நடைபெறுவதால் கள்ளஓட்டுக்கள் தடுக்கப்படுகின்றன. இயந்திரம் மூலம் வாக்களிக்கப்பதால் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகிறதுஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+