இதோ ஒரு அலைபாயுதே!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

அலைபாயுதே சினிமா ஸ்டைலில் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தங்கள் வீட்டிலேயே சிலமாதங்கள் இருந்து விட்டு பின்னர் ஒன்று சேர்ந்துள்ளது சேலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி.

சேலம் குறும்பர்தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் செபாஸ்டின் (29). தங்க நகை செய்யும்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன். இவரது மகள் ஆஷா. (20). பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.

ஆஷாவும், செபாஸ்டினும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்புதெரிவிப்பார்கள் என்று கருதி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டுக்குத் தெரியாமல்வேளாங்கண்ணிக்குச் சென்றனர்.

அங்கு மோதிரம் மாற்றிக்கொண்டு பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு வந்துஎதுவுமே நடக்காதது போல் இருந்து விட்டனர்.

அலைபாயுதே திருமணத்தில் நடிகை ஷாலினியும், நடிகர் மாதவனும் பதிவுத்திருமணம் செய்து கொண்டு தங்கள்வீட்டிலேயே இருப்பார்கள். இறுதியில் ஒன்று சேர்வார்கள். இதே போல் ஆஷாவும், செபாஸ்டினும் காதல்திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ஆஷாவுக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் அதிச்சியடைந்த அவர், தான் 4மாதங்களுக்கு முன்பே திருமணம் ஆகி விட்ட விஷயத்தைக் கூறினார்.

இதையடுத்து ஆஷாவின் பெற்றோர் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திருமணத்துக்குசெபாஸ்டினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆஷாவும், ஜனார்த்தனமும் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் ஏட்டு உஷா ஆகியோர் பெற்றோர்களை வரவழைத்துப் பேசினர். பின்னர்அனைவரையும் மகளிர் போலீஸ் நிலையத்தார் சமாதானம் செய்தனர்.

அதன்பிறகு ஆஷாவை கணவர் செபாஸ்டினுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+