அரசு -புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கேட்கிறது ஐ.தே.க.
கொழும்பு:
இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசும், புலிகளும் பேச்சுவார்த்தைநடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நார்வே தூதுக்குழு உறுப்பினர் வெல்ட்போர்க், அதிபர் சந்திரிகாவிடம், தான் சமீபத்தில்விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசியதாகக்கூறினார். வெஸ்ட்போர்க், அதிபரிடம் பேசும்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமரும் உடனிருந்தார்.
அப்போது விடுதலைப்புலிகள், பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து பல கேள்விகள் எழுப்பியதாக அவர்கூறினார்.
இதற்கிடையே, வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்துநன்கு ஆலோசனை செய்தபிறகு எப்போது பேச்சுவார்த்தை என்பது குறித்து விளக்கப்படும் என்று கூறியுள்ளது.
இருப்பினும் நார்வே நாட்டு தூதுக்குழுவினரின் உதவியுடன் இலங்கை அரசு, புலிகளுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
இதற்கிடையே புலிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு புலிகள் மீது விதித்துள்ளஅனைத்து தடைகளையும் நீக்கினாலொழிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்றுகூறியுள்ளது.
ஆனால் நார்வே தூதுக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தைநடத்தும் வரை அனைத்து முயற்சிகளையும் நார்வே மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது.
ஆனால் சிங்கள உருமாய கட்சி கூறுகையில், அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கவுள்ளபேச்சுவார்த்தையை நாங்கள் கண்டிக்கிறோம்.
அமைதிப்பேச்சுவார்த்தை நடப்பதை எதிர்த்து நாங்கள் ஏப்ரல் 25 ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம். நாங்கள்அமைதிப் பேச்சுவார்த்தையை உடனே கைவிடுமாறும், உடனடியாக புலிகளை எதிர்த்து சண்டையிடுமாறும்போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications