கிராமப்புற தொகுதிகளை குறிவைக்கும் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தென்னக மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளபெரும்பாலான கிராமப்புற தொகுதிகளில் போட்டியிடுகின்றன. நகர்ப்புற தொகுதிகளை தங்கள் கூட்டணிகட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகள் அடங்கிய பட்டியலை சனிக்கிழமைவெளியிட்டார் ஜெயலலிதா. அதன்படி அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள் அனைத்தும் தேவர் இனமக்களும், தலித் இன மக்களும் அதிகம் வாழும் தொகுதிகளாகும்.

தேனி மாவட்டத்தில் அதிமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நான்கு தொகுதிகளிலும் வசிக்கும்பெரும்பான்மையான மக்கள் தேவர் இன மக்களே. இவர்கள் பல ஆண்டுகளாக அதிமுக ஆதரவு மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அங்கு தேவர் இன மக்களின் ஒருபிரிவினரான கள்ளர் இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இரண்டு பெரிய தலித் கட்சிகள் உள்ளன. இருப்பினும் அவர்களை எதிர்த்து தலித் இன மக்கள்அதிகமாக வசித்து வரும் 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகின்றது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் சில தொகுதிகளில்மட்டுமே அதிமுக போட்டியிடுகின்றது. பிற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.

சென்னையில் திமுக கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருப்பதால் சென்னையில் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுகபோட்டியிடுகின்றது. புதுக்கோட்டை உள்பட தென்மாவட்டங்களில் 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிமுக.

இதற்கிடையே, காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ள 15 தொகுதிகளில் பெரும்பாலானவற்றைஅதிமுக எடுத்துக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாங்கள் தேர்வு செய்து வைத்துள்ள 8 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறுஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிமுக ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், பர்கூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கோட்டைஎன்று வர்ணிக்கப்படும் இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+