ஈரோட்டில் கோவில் திருவிழா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு பண்ணாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை குண்டம் திருவிழா நடந்தது. இந்த விழாவில்கோவை மாவட்ட கலெக்டர், ஊட்டி எஸ்.பி ராமமூர்த்தி உள்பட பலர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடந்துவருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல குண்டம் விழா நடந்தது.

தமிழகத்தில் இந்தக் கோயிலில் குண்டம் இறங்கு வதுதான் மிகவும் பிரசித்தி பெற்றது. தெய்வத்திடம் வைத்தகோரிக்கை நிறைவேறவும், அம்மனின் அருள் கேட்டும் இங்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. இந்த ஆண்டுநடந்த குண்டம் இறங்கும் திருவிழாவிற்கு கோயில் பூசாரி அய்யப்பன் தலைமை வகித்தார்.

இந்தக் கோயிலில் இந்த ஆண்டு கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம், நீலகிரி மாவட்ட எஸ்.பி ராமமூர்த்திஆகியோர் தீ மிதித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் தனது மனைவி சாந்தி சந்தானத்துடன் கோயிலில்வழிபாட்டை முடித்த பின்னர் அதிகாலையில் குண்டம் இறங்கி தீ மிதித்தார்.

மேலும்,அவரது மனைவி சாந்தியும் தீமிதித்தார். எஸ்,பி., தனது சீருடையிலேயே இறங்கி தீ மிதித்து அனைவரையும்அசத்தினார். மேலும், இந்துசமய அறநிலையத் துறை இயக்குநர் சவார்க்கர், இணை அதிகாரி கே.கே ராஜா, ஈரோடுமாவட்ட தன்மை நீதிபதி சம்பத்குமார், கூடுதல் கலெக்டர் அமுதா, எம்.பி கே,காளியப்பன், ஆர்.டி.ஓ. சாந்தாஆகியோரும் தீ மிதித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் இங்கு குண்டம் இறங்கி தீ மிதித்ததால்தான் "காட்டுமிராண்டித்தனம் எனத் திட்டித் தீர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+