ஆண்டி பண்டாரம் முன்னேற்ற கழகம் உதயம்
கோவை:
ஆண்டிப் பண்டாரம், பண்டராம், எல்லோரும் ஒன்று தான், அனைவரும் வறுமையில் தான் வாழ்கிறோம், எங்கள்நலனில் அக்கறை செலுத்தினால், உங்களுக்கு ஓட்டுப் போடத் தயார் என்கிறது ஆண்டிப்பண்டாரம் முன்னேற்றப்பேரவை.
கோவை மாவட்டம், அவிநாசியில் தமிழக ஆண்டிப் பண்டாரத்தினர் முன்னேற்றப் பேரவையின் பொதுக் குழுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டராங்கள். ஆனால், சமீபத்தில் துவக்கப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தில் ஆண்டிப் பண்டராங்களுக்குஅங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
பண்டாரங்களுக்கும் உரிய பிரதிநதித்துவம் அளித்து வாரியத்தில் உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும். ஆண்டிப்பண்டாரம், பண்டாரம் என்பதெல்லாம் ஒரே பெயர் தான். எல்லோரும் வறுமைக் கோட்டிற்குள் தான் இருக்கிறோம்.
இந்த பெயர்களை ஒரே பெயராக அறிவிக்க வேண்டும். முன்னோர்கள் கோயில்களுக்கு அளித்த நிலங்களைபண்டாரங்களுக்கு பட்டாப் போட்டுக் கொடுக்க வேண்டும். அதில் விவசாயம் செய்ய கடனுதவி, இலவச மின்சாரம்அளிக்க வேண்டும். திரைப் படங்களில் பண்டாரம், ஆண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்துவதையும், கேலிகிண்டல்களையும் நிறுத்த வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை ஏற்று எங்களது சமூக நலன் காக்க உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தால்நாங்கள் அவர்களுக்கு வாக்கு அளிப்போம்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications