கூட்டணி கட்சிகளில் எதிரிகளை களையெடுக்கும் ஜெ
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும்அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடவேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக இருக்கிறார்.
அவ்வாறு வெற்றி பெறாவிட்டால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவேண்டியதிருக்கும்.
அந்த சூழ்நிலை ஏற்பட்டால், கூட்டணிக் கட்சிகளில் தன்னை எதிர்ப்பவர்களால்பிரச்சனை வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தனக்கு எதிரி எனகருதுபவர்களுக்கெல்லாம் தேர்தலில் சீட் கிடைக்காமல் போகும் விதமாக அவர்கள்வெற்றி பெற்ற தொகுதிகளையெல்லாம் பறித்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
இதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தி.மு.கவின் தீவிரஆதரவாளரான ஏ.எஸ்.பொன்னம்மாளின் நிலக்கோட்டை தொகுதியை பறித்துக்கொண்டார் ஜெயலலிதா.
பொன்னம்மாள் தொடர்ந்து 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்ற சட்டசபை தேர்தலின் கருணாநிதியை வானளாவ புகழ்ந்துகருணாநிதியையே திக்குமுக்காடச் செய்தவர். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தபின்னும் கூட கருணாநிதி முதல்வராக வேண்டும் என கூறி வந்தவர்.
இந்நிலையில் த.மா.காவுக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டால் சீனியர் என்றமுறையில் பொன்னம்மாளுக்கு சீட் கொடுக்கப்படும் என்பதால் நிலக்கோட்டைதொகுதியில் தான் போட்டியிடுவது என அ.தி.மு.க. முடிவு செய்து அந்த தொகுதியைத.மா.காவிடமிருந்து பறித்துக் கொண்டார் ஜெயலலிதா.
இதே போல் கருணாநிதி ஆதரவாளரான தேனி எம்.எல்.ஏ.அழகர்ராஜா, பொங்கலூர்எம்.எல்.ஏ.மோகன் கந்தசாமியின் தொகுதிகளையும் ஜெயலலிதா தானே வைத்துக்கொண்டார்.
கிள்ளியூர் த.மா.கா. எம்.எல்.ஏ.டாக்டர் குமாரதாஸ் ஜெயலலிதாவை கடுமையாகஎதிர்த்து வருபவர். அதனால் களையெடுப்பு முயற்சியின் அடிப்படையில் அந்ததொகுதியை த.மா.காவுக்கு ஒதுக்குவதில்லை என ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தி.மு.க.- த.மா.கா. கூட்டணிக்கு முயற்சி செய்தவரும், கருணாநிதியின்அதரவாளருமான சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ் .அழகிரிக்கு அந்த தொகுதிகிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கிவிட்டார்ஜெயலலிதா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. கே.சுப்பராயன் ஜெயலலிதா வழக்குகள்பற்றி கடுமையாக விமர்சனம் செய்தவர். இதனால் இவர் போட்டியிட்டு வென்றதிருப்பூர் தொகுதி அக்கட்சிக்கு தரப்படவில்லை.
ஆனால், அதே நேரத்தில் ராமதாசின் தீவிர ஆதரவாளரும், கருணாநிதியை புகழ்ந்துவந்தவருமான ஜி.கே.மணியின் தொகுதியிலும், ஜி. கணேசன் தொகுதியிலும்ஜெயலலிதா கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இதேபோல் த.மா.கா பொருளார் கே.எஸ் சுதர்சனம் போட்டியிட்டு வென்ற பூந்தமல்லி,கே.எஸ். அப்பாவு வெற்றி பெற்ற ராதாபுரம் தொகுதிகளையும் த.மா.காவிடமிருந்துபறித்து பா.ம.கவுக்கு கொடுத்து விட்டார் ஜெயலலிதா.
தனக்கு எதிரியாகவும், தனக்கு பிரச்சனை ஏற்படுத்துவார்கள் எனகருதுபவர்களையெல்லாம் அடக்கி, ஒடுக்கி வைக்க ஜெயலலிதாமுடிவெடுத்துவிட்டார்.
அதற்கு ஒரே வழி அவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை பறித்துக்கொள்ளதுதான் வழி என முடிவு செய்தார். அவர்கள் முன்னர் போட்டியிட்டு வென்றதொகுதிகள் கிடைக்காவிட்டால் அவர்கள் வேறு தொகுதியில் போட்டியிட்டால்வெல்ல முடியுமா என்பது சந்தேகமான விஷயம்தான்.
எதிரிகளை களையெடுக்க முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டார் ஜெயலலிதா.இது எந்த அளவுக்கு அவருக்கு பலனளிக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications