ஜெயலலிதா போட்டியிடலாமா? தேர்தல் கமிஷன் இன்று முடிவு
டெல்லி:
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடலாமா கூடாதா என்பது குறித்து தலைமைத் தேர்தல் கமிஷன்இன்று (சனிக்கிழமை) முடிவெடுக்கவுள்ளது.
டான்சி நில ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளி எனக் கூறப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலலிதாதேர்தலில் போட்டியிடலாமா கூடாதா என இரு விதமான வாதங்கள் கூறப்படுகின்றன.
தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கியிருப்பதால் தேர்தலில் போட்டியிடஎந்தத் தடையும் இல்லை என ஜெயலலிதா கூறி வருகின்றார்.
ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுவிட்டதால் அவர் தேர்தலில் நிற்கமுடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார்.
இதையடுத்து தான் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதே நேரத்தில் ஜெயலலிதா இன்னும் சிறை தண்டனையை அனுபவிக்காததால் தேர்தலில்அவர் நிற்க தடையில்லை எனவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதா தேர்தலில் நிற்கலாமா இல்லையா என்பதை தேர்தல் கமிஷனும், உச்ச நீதிமன்றமும் தான் முடிவெடுக்கவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களின் யோசனைகளும் கேட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஜெயலலிதா குறித்து தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications