மதுரை விமான நிலைய ரன்வேயை விரிவாக்க கிராமத்தினர் எதிர்ப்பு
மதுரை:
மதுரை விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை (ரன்வே) விரிவாக்கும் முயற்சிக்கு அவனியாபுரம் அருகேஉள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், ரன் வேயின் நீளத்தை அதிகரிக்கும்பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஓடுபாதையை 1,500 அடி நீளமாக்க விமானத்துறை முடிவு செய்து அதற்கான சர்வேயில் இறங்கியபோதே இந்தஎதிர்ப்புக் கிளம்பிவிட்டது.
விமான ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்தால் இங்குள்ள பரம்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவிவசாயிகளை இங்கிருந்து இடம் பெயரச் செய்ய வேண்டும். அவர்களின் வீடுகளையும் இடிக்க வேண்டி வரும்.
மல்லிகைப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள இவர்களின் விவசாய நிலங்களையும் விமானத்துறையிடம் இவர்கள்ஒப்படைக்க வேண்டியிருக்கும். இதனால் இதற்கு இந்த கிராம மக்கள் தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், இங்கு சுமார் 70 கிணறுகள் உள்ளன. இதிலிருந்து இறைக்கப்படும் நீரை வைத்துத் தான்மல்லிகைப் பூ உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலத்தையும், கிணறுகளையும் விட்டால் எங்களுக்குபிழைப்புக்கே வழியில்லை என்கின்றனர்.
விமான நிலையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரசு நிலத்தையே விமான ஓடு பாதை விரிவாக்கத்துக்குப்பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு எங்கள் நிலத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர்.
ஆனால், இந்த கிராமத்தினர் கூறும் நிலத்தை விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்கு பயன்படுத்த முடியாதுஎன்கின்றனர் அதிகாரிகள்.
விமான ஓடுபாதையை நீளமாக்கினால் தான் பெரிய விமானங்கள் இங்கு வந்து இறங்க முடியும். மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் முடியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications