இன்று மதிமுக மாநாடு: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வைகோ இன்று (சனிக்கிழமை) கோவையில்அறிவிக்கிறார். இந்தப் பட்டியல் முழுமையானதாக இருக்காது எனத் தெரிய வந்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து 213 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலைமுடித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த இந்த நேர்காணலையடுத்து இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடும்எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வேட்பாளர் பட்டியலில் முதல் கட்டமாக 40 முதல் 50 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் மட்டுமே அறிவிக்கப்படும்.மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், திமுக, மற்றும் அதிமுகவினர் வேட்பாளர்களை அறிவித்த பின்னரேஅறிவிக்கப்படவுள்ளது.
கோவைல் இன்று மதிமுக அரசியல் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கவும், தேர்தல் பிரகடனம்செய்யவும் மதிமுக முடிவு செய்துள்ளது. காலை 11 மணி முதல் துவங்கும் நிகழ்ச்சிகளில் பொதுச் செயலர் வைகோ கலந்துகொள்கிறார்.
காலையில் மதிமுக தொழிற்சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம், பின்னர் மதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்திலும் வைகோபேசுகிறார். மாலையில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
இந்த மாநாட்டையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் கோவைக்கு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.காலையிலேயே கோவை மதிமுக தொண்டர்களின் வருகையால், களை கட்டத் தொடங்கிவிட்டது.
அதிக ஆடம்பரமின்றி, போஸ்டர்கள் மட்டுமே அச்சிட்டுள்ளனர். வரவேற்பு வளைவுகள், கட் அவுட்டுகள், சீரியல் விளக்குகளைத்தவிர்த்திருந்தாலும், பம்பரம் சின்னம் மட்டும் பெரிய அளவில் சீரியல் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பல இடங்களில்வைக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications