தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றுவோம்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும்வேட்பாளர் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டார். அதன் பின் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கைய அவர்வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகம் இந்தியாவிலேயே ஒரு சிறந்த அமைதிப் பூங்கா என்ற நிலையை உருவாக்குவோம்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களுடன் பொருளாதார மறுமலர்ச்சி மலர்ந்திடச்செய்வோம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் போதிய வாய்ப்புகளும், வளங்களும் நிறைந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்போம்என உறுதி கூறுகிறோம்.

மக்கள் நலன் காக்கும் சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலம்என்ற நிலையை எட்டுவோம்.

ஆட்சி மற்றும் நிர்வாக முறைகளில் விரைவாகவும், தூய்மையும், திறமையும், திகழ்ந்திடவும் அ.தி.மு.க.உளப்பூர்வமாக உறுதியளிக்கிறது.

தமிழகம் அனைத்து நிலைகளிலும் உன்னத வளர்ச்சியை அடைவதற்கு மாநிலத்துக்கு அதிக நிதி ஆதாரங்களும்,அரசியல் சட்ட ரீதியாக கூடுதல் அதிகாரங்களும் தேவை. அவற்றை அடைய தீவிரமாக பாடுபடுவோம்.

தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் மத்திய-மாநில பிரச்சனைகளுக்கும், மாநிலங்களுக்கு இடையேஉள்ள பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் காண்பதில் நல்லுணர்வும், கவனமும் நிறைந்த அணுகுமுறையைமேற்கொளவோம்.

தமிழகத்தின் ஜாதி.சமய ஒற்றுமையைச் சிறப்புடன் பேணிக்காப்போம்.

அண்டை மாநிலங்களுக்கு அரிசி மற்றும் பிற பொருட்களைக் கடத்துவதைத் தடை செய்வதோடு, அத்தகையகுற்றம் புரிபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வு காலத்திற்கு முன் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு நல்ல திடகாத்திரமான உடல் நிலை மற்றும்திறமையின் அடிப்படையில், வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

போலீஸ் நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இத்துறை கொண்டுவரப்படும்

கள்ளச்சாராய ஆதிக்கம் ஒழிக்கப்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல்துறையின் அனைத்து பிரிவுகளின் சாதனங்களும் நவீனபடுத்தப்படும்.

காவல் நிலையங்களின் எண்ணிக்கையையும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மகளிர் காவல்நிலையங்களை அதிகப்படுத்தவும், கம்ப்யூட்டர் தகவல் தொழில் நுட்பத்தை அனைத்து காவல் நிலையங்களிலும்நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவவர்கள் நலன் காக்கும் வகையில் லைன்ஹட் எனப்படும் பழமையான குடியிருப்புக்கு பதிலாக புதிய நவீனவசதி குடியிருப்பு கட்டித்தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+