அரசியலில் இருந்து விலகுகிறார் மாறன்
சென்னை:
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான முரொலி மாறன் தீவிரஅரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு கடந்த வருடம் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்துஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த நவம்பர் மாதம் வீடுதிரும்பினார்.
வீடு திரும்பிய பின்னும் அவர் கட்சி விஷயங்களுக்காக டெல்லிக்கும், சென்னைக்கும் போக வேண்டியதாகஇருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை முரசொலி மாறன், தான் தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதாகஅறிவித்துள்ளார்.
அவர் திடீரென்று இவ்வாறு அறிவிக்கக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. திமுக கட்சியில் புதிய கட்சிகளின்சேர்க்கை, சில கட்சிகளின் விலகல், சாதிக்கட்சிகளின் சேர்ப்பு இவற்றில் மாறன் அதிருப்தியுடன் இருப்பதாகவும்தெரிகிறது.
இதற்கிடையே மேயர் ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் மாறனை சென்று சந்தித்தனர்.
நிருபர்களும், போட்டோகிராபர்களும் அவர் வீட்டு வாசல் முன்பு குவிந்தனர். ஆனால் அவருக்கு உடல்நிலைசரியில்லை. அதனால் தான் அவர் அரசியலில் இருந்து விலகுகிறார் என்று அவர் வீட்டில் உள்ளவர்கள் கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications