சாதி கட்சிகளை ஊக்குவிக்கிறார் கருணாநிதி: மதிமுக மாநாட்டில் வைகோ குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவை:

Vaiko
மதிமுக மாநாட்டில் சிறப்புரை
ஆற்றுகிறார் வைகோ
பல கோடிகளைக் கொடுத்து கூலிக்கு ஆட்களைக் கூட்டி வந்த சாதிக் கட்சிகளுக்கு இடம் கொடுத்து விட்டார்கருணாநிதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வலுவிழக்கக் காரணம் முதல்வர் கருணாநிதிதான் எனவைகோ குற்றம் சாட்டினார்.

கோவையில் மதிமுக வின் தேர்தல் சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தேர்தல் வாக்குறுதிகளைவெளியிட்டு வைகோ பேசியதாவது:

உடன் பிறப்புகளை உதாசீனப்படுத்தி விட்டார் கருணாநிதி. 10 இடம் வேண்டுமா, 12 இடம் வேண்டுமா எனக்கூறிய அவர், பொய்ப் பழி சுமத்தி எங்களை வெளியேற்றி விட்டார். 21 இடங்கள் கொடுப்பதாகக் கூறியஅவர்களிடம் கனிவு இல்லை. பரிவு இல்லை.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் நான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நாங்கள் கேட்கும் 25இடங்களைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், முடிவில் எங்களையும் உதாசீனப்படுத்தி விட்டார்கருணாநிதி. பல கட்சிகளை உடைத்தவர் தானே அவர். மதிமுகவை உடைக்கவே முடியாது. ஏனென்றால், இந்தக்கட்சி நெருப்பில் பூத்த மலர்.

தமிழத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழக்கக் காரணம் முதல்வர் கருணாநிதிதான். பல கோடிகளைச்செலவழித்து ஆட்களைக் கூட்டி வந்து பேரணி நடத்திய சாதிக் கட்சிகளுக்கு அவர் இடம் கொடுத்து விட்டார்.

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா போராடினர். அவர்களின் லட்சியக் கனவுகளை ஒழித்துவிட்டார். எல்லா சாதியினரும் எங்கள் சகோதாரர்களாகப் போற்றுகிறோம். எங்களிடைய சாதி மத வேற்றுமைஇல்லை.

அணணா, பெரியார் கொள்கைக்கு எதிராக சாதிக் கட்சிகளைச் சேர்த்தபோது கூட்டணிக் கட்சிகளை கருணாநிதிகேட்டாரா? யாரைக் கேட்டுச் சேர்த்துக் கொண்டார். இந்த தமிழகத்தை ஜாதிச் சண்டையால் பீகார் போலமோசமாக்கிட கருணாநிதி முயற்சி செய்வது ஏன்?

இருந்தாலும் கூட கூட்டணியில் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் எதுவும் கருத்துதெரிவிக்கவில்லை. அறிக்கை விடவில்லை. கூட்டணியை உடைக்கவில்லை. மதிமுக தனித்துப் போட்டியிடும்நிலையை இயற்கை தானாகவே உருவாக்கி விட்டது. நாங்கள் உருவாக்கவில்லை.

சிறுபான்மையினருக்கு தீங்கு ஏற்பட்டால், கூட்டணியை விட்டு விலகி விடுவேன் என அவர்களுக்கு வாக்குறுதிகொடுக்கிறார் கருணாநிதி. அப்படியானால் அவருக்கு பா.ஜ. மீது அவருக்குச் சந்தேகமா? நம்பிக்கையில்லையா?நம்பிக்கை வைப்பவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் நடப்பவர் தான் கருணாநிதி.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவுகூட அளிக்க மறுக்கப்பட்டது. அந்த குருஷேத்ரப் போரின் முடிவுவேறு விதமாக இருந்தது. பஞ்ச பாண்டவர்கள் போல கெஞ்சிக் கேட்டேன். அதிகார போதை தடுத்து விட்டது. இதுவிசு ஆண்டு. விஷ்வரூபம் எடுப்போம் என்றார் வைகோ

இந்த தேர்தல் சிறப்புக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், கோவை மாவட்டச்செயலர் ஆர்.டி மாரியப்பன், எல். கணேசன் ஆகியோர் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+