திமுக கூட்டணியில் இணைந்தது பு.நீ.க.
சென்னை:
ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி சனிக்கிழமை திமுக கூட்டணியில் இணைந்தது.
இந்தக் கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலை தனித்து எதிர்கொள்வது என முதலில் புதிய நீதிக்கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால்திமுக தரப்பிலிருந்து ஏ.சி.சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பை அடுத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையில் புதிய நீதிக்கட்சி 20 தொகுதிகள் கேட்டது. ஆனால்அதற்கு திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் திமுக தலைவர்கள் புதிய நீதிக்கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறுபடியும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
கட்சியின் துணைத்தலைவர் திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில்சண்முகத்துடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் புதிய நீதிக்கட்சி உடையும் அபாயம்ஏற்பட்டது. பின்னர் கட்சிக்குள் சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து தற்போது புதிய நீதிக்கட்சி திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளது. இவர்களுக்கு 5 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நலத்தைக் கருத்தில் கொண்டும், தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் திமுக கூட்டணியில்இணைந்துள்ளோம் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
புதிய நீதிக்கட்சி போட்டியிடும் தொகுதிகள்
1. ஆரணி
2. பவானி
3. ரிஷிவந்தியம்
4. திருவள்ளூர்
5. சோளிங்கர்












Click it and Unblock the Notifications