கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெ.
சென்னை:
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.
இதற்காக சென்னை போயஸ் தோட்டத்திலிருந்து தனது சகல பரிவாரங்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலைகிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது உயிர்த்தோழி சசிகலாவும் உடன் சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தேனி மாவட்டம்ஆண்டிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியிலும் போட்டியிடுகிறார்.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
கிருஷ்ணகிரியில் பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் அவர் அங்கிருந்து மதுரை செல்கிறார்.மதுரையில் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார்.
தேர்தல் பிரசாரம்:
ஏப்ரல் 18 ம் தேதி முதல் அடுத்த மாதம் 7 ம் தேதி வரை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். அனைத்துமாவட்டங்களிலும் பிரசாரம் செய்யும் அவர் இறுதியாக அடுத்த மாதம் 7 ம் தேதி சென்னையில் பிரசாரம்செய்கிறார்.
20 நாட்கள் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதால் அவருக்குத் தேவையான பொருட்கள், திறந்த வெளி பிரசாரவேனுடன் கிருஷ்ணகிரி சென்றுள்ளார்.
ஏசி செய்யப்பட்ட 2 மெர்சிடஸ் சுவராஜ் பிரசார வேன்கள், ஒரு திறந்த வெளி பிரசார வாகனமும்ஜெயலலிதாவுடன் சென்றன. அவருடன் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களும் சென்றனர்.
கிருஷ்ணகிரி செல்லுமுன் ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சென்றனர். இவர்கள்போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியே வந்ததும் வீட்டு வேலையாள் ஒருவர் திருஷ்டி தேங்காய் உடைத்தார்.
தமிழ்நாடு ஹோட்டலில் தங்குகிறார்:
கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டலில் தங்குகிறார் ஜெயலலிதா. இதனால் அங்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தங்கும் அறையில் ஏ.சி.உள்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரியும், தர்மபுரி மாவட்ட ஆர்.டி.ஓ.வுமான மதிவாணனிடம் ஜெயலலிதாவேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications