பெண் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம்
குறிஞ்சிப்பாடி:
பெண் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். சுமார் 20 ஏக்கர்நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார்.
தற்போது மணிலா செடி போட்டுள்ளார். அறுவடை நேரம் ஆரம்பித்து விட்டதால் மணிலாவைப் பறிப்பதற்கு 20கூலித்தொழிலாளர்களைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
இந்த நேரத்தில் மேல்பூவாணிக்குப்பம் காலனியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (35) என்பவர் மணிலா செடிபயிரை அறுத்துக் கொண்டிருந்த பாண்டு என்பவரிடம் சென்று உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுஎன்று கேட்டார்.
பாண்டு பெண் கொடுக்க மறுத்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்தமுத்துக்கிருஷ்ணன் தனது ஆட்கள் சிலரை அழைத்து வந்து அங்கு மணிலா செடி பயிரை அறுத்துக்கொண்டிருந்தவர்களை அடித்து துவம்சம் செய்தார். காயமடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications