ரஷ்யாவில் தமிழ்ப்புத்தாண்டு கோலாகலம்
மாஸ்கோ:
ரஷ்யாவில் வாழும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தமிழ் புத்தாண்டையொட்டி நூற்றுக்கணக்கான தமிழர்கள் மாஸ்கோ பல்கலைகழகத்தின் கலாசார மையத்தில் கூடி2,033வது தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
பெருந்திரளாக ரஷ்யர்களும், அயல்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய தமிழர்களும்புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
இந்திய தூதரகத்தைச் சேர்ந்த கப்பற்படை தலைவர் கமடோர் குமார் புத்தாண்டு கொண்டாட்டங்களை துவக்கிவைத்தார். புத்தாண்டில் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என அவர் வாழ்த்தினார்.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவிலிருக்கும் தமிழ் இலக்கிய வல்லுனர் அலெக்சான்டர் துபியான்ஸ்கி கூறுகையில்,இந்த புத்தாண்டு தீபத்துடன், ஒளியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒளி மிகுந்த ஆண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்கும் ஆண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பல மணிநேரம் இனிமையான இசை நிகழ்சி மக்களை மயங்க வைத்தது. தமிழகத்தின் பாரம்பரிய நடனமானபரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
ரஷ்யாவில் இருந்து வரும் வழக்கப்படி இந்த ஆண்டு ரஷ்யாவில் உயர் படிப்பை முடித்து இந்தியாதிரும்புபவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications