For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மாநிலங்களில் வேட்புமனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடக்கவுள்ளசட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கானவேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதற்கான முறையான அறிவிப்பை அந்தந்த மாநில கவர்னர்கள் வெளியிடுவார்கள்.

இந்தத் தேர்தலில் 5 மாநிலங்களில் உள்ள 13.4 கோடி வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தஉள்ளனர்.

இந்தத் தேர்தலில் 824 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்:

5 மாநில சட்டசபைத் தேர்தலோடு தமிழகத்தில் திருச்சி, உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்பூர், மேற்கு வங்கத்தில்உள்ள மிட்னாப்பூர் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல்:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி வரும் 23 ம் தேதி வரைநடக்கிறது. காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் 26 ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மே 8 ம் தேதி பிரசாரம்முடிவடைகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X