தே.ஜ.கூட்டணியின் நம்பிக்கை துரோகி திமுக: வைகோ
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நம்பிக்கையாகவும், உண்மையாகவும் திமுக இல்லை, அது சந்தேகத்தின் நிழலில்உள்ளது என கோவையில் வைகோ தெரிவித்தார்.
மதிமுக திங்கள்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறது. தேர்தல பிரச்சாரத்தை வைகோ இன்று கரூர் மாவட்டம்அரவக்குறிச்சியில் துவக்கி வைக்கிறார். அதற்கு முன்பாக கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர்வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக விற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்களின் சாதிவாரியாக திமுக தினகரன் நாளிதழில் பட்டியலிட்டுள்ளது. இது முதல்வரின் உத்தரவின்பேரில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவிற்காக உயிரைக் கொடுத்து பாடுபட்ட மூத்த தலைவர்களுக்கு இன்று சாதிப் பெயர் கொடுத்து இப்பட்டியல்வெளியிடப்படுள்ளது. பெயர் சொல்லிக் கூட அழைக்காமல் நாங்கள் மரியாதையாக பேராசிரியர் எனஅழைக்கப்பட்ட அன்பழகன் இப்போது முதலியார் முத்திரை குத்தப்பட்டு விட்டார். கோ.சி. மணி முக்குலத்தோர்ஆனார். ஆற்காடு வீரசாமி நாயுடுவானார்.
பரிதி இளம் வழுதி தாழ்த்தப்பட்டோர் ஆக்கப்பட்டார். இதற்கு மன்னிப்பே கிடையாது. திமுகவில் தவறுக்கு மேல்தவறு நடக்கிறது. அண்ணா, பெரியார் கொள்கைளை திமுக குழி தோண்டி புதைத்து விட்டது.
சாதிக் கட்சிகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் கிடையாது என கூறியிருந்தோம். ஆனால் யாரையும்கேட்காமல் சாதிக் கட்சிகளைச் சேர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே தூரோகம் செய்து விட்டது திமுக.
திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நம்பிக்கையாகவும், உண்மையாகவும் திமுக நடந்து கொள்ளவில்லை. அதுஇக் கூட்டணியின் சந்தேகத்தின் நிழலில் உள்ளது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக் கூட்டணிக் கூட்டத்தில்திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து இன்னும் திமுக விலிருந்து யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
வாஜ்பாய் அரசைக் கவிழ்க்க காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரசுக்கு 40 இடங்கள் தருகிறேன் எனக் கூறிதேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே திமுக துரோகம் விளைவித்து விட்டது.
இன்று ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர். தேர்தல் நெருங்கும்போது திமுக மக்களுக்கு இழைத்த துரோகங்களை ஆதாரத்துடன் வெளியிடுவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்போது பாரதிய ஜனதா, எம்.ஜி.ஆர் அதிமுக, எம்.ஜி.ஆர் கழகம்ஆகியவற்றைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் சாதி அடிப்படையிலான கட்சிகளாகும்.
அங்கு இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை. சாதிக் கட்சிகளின் கூட்டணியாக திமுக கூட்டணிமாறிவிட்டது. சாதிக் கட்சிகளைச் சேர்க்க பா.ஜ.,வும், மதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்தது. எந்த கருத்தையும்நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அறிக்கை விடுகிறது பா.ஜ. சாதிக் கட்சிகள் இடம் பெற்றதில் பா.ஜ.,விற்கும்வருத்தம் உண்டு.
ஆனால் அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. திமுக வின் சாதிக் கூட்டணி பற்றி நான்பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் தெரிவித்துள்ளேன்.
மதிமுக தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய ஜனநாயக்கூட்டணியின்ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னான்டஸ் இதனைை தெளிவுபடுத்தியுள்ளார்.
மாநலங்களில் கூட்டணியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஐக்கிய ஜனதா தாளம், பா.ஜ இரண்டுமே தேசியஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பல மாநிலங்களவைத் தொகுதியில் எதிர்த்துப்போட்டியிடுகின்றன என்றார்.
பேட்டியின்போது, மத்திய அமைச்சர் கண்ணப்பன் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications