வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
கோவை:
இந்து மக்கள் கட்சித் தலைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன் பிரிவு) அமைப்புத் தலைவராகப்பணியாற்றி வந்தார்.
மேலும், இவர் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தொண்டத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
கோவை சாயிபாபா காலனியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் இவரை கடந்த சில நாட்களுக்குமுன்பாக சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவிநாசி நீதிமன்றத்தில்கார்த்திக், சண்முகம், முத்துசாமி ஆகியோர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.












Click it and Unblock the Notifications