வங்கதேச படைகள் தாக்கி 16 இந்திய வீரர்கள் பலி
கெளஹாத்தி:
இந்திய- வங்கதேச எல்லைப் பகுதியில் வங்கதேச ரைபிள்ஸ் வீரர்கள் நடத்திய பயங்கரதுப்பாக்கித் தாக்குதலில் 16 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2 வங்கதேச ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். 9 பொதுமக்களும் இந்தச் சண்டையில்படுகாயமடைந்தனர். புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.
இந்திய- வங்க தேச எல்லையில் மேகாலயாவில் ஷில்லாங்குக்கு 80 கிலோமீட்டர்தொலைவில் இருக்கும் பிர்டிவா கிராமத்தில் இருக்கும் இந்திய எல்லை பாதுகாப்பு படைமுகாம் மீது வங்கதேச ரைபிளஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்தியவீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என வங்கதேசம் கூறி வருகிறது. ஆனால், இதுஇந்திய எல்லைக்குள் தான் உள்ளது.
இந்திய- வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த சிலவாரங்களாவே மோதல் நடந்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்புப் படையைச்சேர்ந்த 25 வீரர்களை வங்கதேச ரைபிள்ஸ் வீரர்கள் பிணயக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். 3வது நாளாக தொடர்ந்து அவர்கள் இன்னும் பணயக் கைதிகளாகவைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் 16 இந்திய வீரர்களை வங்கதேசம் கொன்றுள்ளது.
வங்கதேச ரைபிள்ஸ் தலைவர் மேஜர் ஜெனரல் பஜ்லூர் ரஹ்மான் செய்தியாளர்களிடம்கூறுகையில், இரு படையினரிடையே துப்பாக்கி சூடு புதன்கிழமை காலை 5.30க்குதொடங்கியது. இது மாலை 5.00 மணி வரை நடந்ததது.
இறந்து போன பிஎஸ்எப் வீரர்கள் உடல்கள் இந்திய நிலை அருகிலேயே இருக்கிறது.காயமடைந்த 2 இந்திய பி.எஸ்.எப். வீரர்கள் பிடிஆர் வீரர்களால் ஹெலிகாப்டர் மூலம்வங்கதேசத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பிர்டிவாவை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது. இந்திய பி.எஸ்.எப். வீரர்கள்தான்வங்கதேசத்தின் பி.டி.ஆர். வீரர்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர்.
இந்தியா தரப்பில் 16 பி.எஸ்.எப். வீரர்கள் கொல்லப்பட்டதை அரசு மறுக்கவும் இல்லை,ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்திய அதிகாரிகள் கூறுகையில், வங்கதேசப் படையினர்தான் முதலில் தாக்குதலை ஆரம்பித்தனர். நாள் முழுவதும் சண்டை தொடர்ந்தது. ஆனாலும்இது குறித்த முழு விவரமும் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்றனர்.
மேகாலயா மாநில முதல்வர் மாவ்லாங் கூறுகையில், இந்த பிரச்சனை மிகவும்அபாயகரமானது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும். வங்கதேசரைபிள்ஸ் வீரர்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி ஊடுறுவியுள்ளனர் என்றார்.
வங்கதேசப் படையினரின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்த இந்தியபடைகள் தயாராக இருக்கின்றன என பி.எஸ்.எப். அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் எல்லை இந்திய-வங்கதேச எல்லையை இந்தியா முழுவதுமாக மூடிவிட்டது.இந்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications