ஜி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக பறந்தது
சென்னை:
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தகவல் தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் 36, 000 கிலோமீட்டர் உயரத்தில் ஏவும் திறன் கொண்ட இந்த ராக்கெட்டை இந்தியாவேவடிவமைத்து தயாரித்தது. புதன்கிழமை விண்ணில் பறந்த இந்த ராக்கெட் ஜி-சாட் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கடந்த மாதம் 28 ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நொடியில் ராக்கெட்டின் ஸ்ட்ராப் ஆன் மோட்டாரில்ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை ஏவப்படுவதை கம்ப்யூட்டர் நிறுத்தி விட்டது.
இதையடுத்து கடந்த 18 நாட்களில் விஞ்ஞானிகள் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாரை முற்றிலும் சீரமைத்து இயல்பு நிலைக்குத் திருப்பினர்.
இதையடுத்து புதன்கிழமை மாலை 3.50 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு பெரியமைல்கல்லாகும்.
இத்தகைய ராக்கெட்டுகளை பயன்படுத்தி பூமிக்கு மேலே 1000 கிலோ எடையுள்ள ஜியோ சின்குரோனைஸ்டு சாட்டிலைட் ஒன்றை நிறுத்த 18 மில்லியன்டாலர்கள் முதல் 33 மில்லியன் டாலர்கள் வரை செலவாகிறது.
ஆனால், இஸ்ரோ அமைப்பு ஜியோ சின்குரோனைஸ்டு சாட்டிலைட்களை ஏவ 4 மில்லியன் டாலர்களை மட்டும் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
முந்தைய செய்திகள் :
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications