ஜெ.மனு நிராகரிக்கப்பட்டால் தம்பிதுரையை முதல்வராக்க திட்டம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வேட்புமனு நிராகரிக்கப்பட்டால்,அதிமுக கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் தம்பிதுரையை முதல்வராகஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி,இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல்தண்டனை பெற்றுள்ளதாலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாலும் அவர்தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்று இதுவரை தெரியவில்லை.
தான் குற்றவாளி என்ற தீர்ப்பை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்திருந்தமனுவை நீதிபதி மலை. சுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 16 ம் தேதி கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுவை கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் பெற்றுக் கொண்டார். அவர் கூறுகையில், ஜெயலலிதாதேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து வேட்புமனு பரிசீலனை செய்யும் நாளான ஏப்ரல் 24 ம் தேதிதான்தெரிய வரும் என்றார்.
இதனால் ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது வரும் 24 ம் தேதி தான் தெரிய வரும்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்துஏற்பாடுகளையும் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை முன்னின்று கவனித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதிமுக கூட்டணிஅருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் தம்பிதுரையை முதல்வராக ஜெயலலிதாஅறிவிப்பார் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications