ஒரு ஜாதியும் .. சில சுவாரஸ்யங்களும்
சென்னை:
தாழ்த்தப்பட்டவர்களின் கட்சிகளான புதிய தமிழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இரண்டும் திமுகஅணியில் இருந்தாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே எப்போதுமே ஒத்துப் போகாது. அதற்கான காரணங்கள்சுவாரசியமானவை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் பள்ளர் பிரிவைச்சேர்ந்தவர்கள்.
அதேபோல, வட மாவட்டங்களில் உள்ளவர்களில் பறையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகஉள்ளனர்.
பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே, பறையர் பிரிவைச் சேர்ந்தவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள்என்று கூறிக் கொள்வது வழக்கம். மேலும், இவர்களுக்குள் பெண் கொடுக்கும், எடுக்கும் திருமண பந்தம்கிடையாது. தங்கள் பிரிவுக்குள்தான் பெண் கொடுத்து, எடுப்பார்கள்.
புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர். விடுதலைச் சிறுத்தைகளின்தலைவர் திருமாவளவன் பறையர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களது ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களேஅவர்களது கட்சிகளிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆதி காலத்தில் இருந்தே நிலவி வரும் ஜாதிப் பிரிவினை, இவர்களது கட்சிகளையும் தனித்தே செயல்பட வைத்துவிட்டது.
இப்போது, திமுக அணியில் இரு கட்சிகளும் இணைந்து ஓரணியில் நின்றாலும் கூட இதுவரை திருமாவளவனும்,டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்தித்துப் பேசிக் கொண்டதில்லை.
இவர்கள் இருவரும் இணைந்து கூட்டுப் பிரசாரம் செய்வார்களா என்றும் தெரியவில்லை. இருவரும் இணைந்துபிரசாரம் மேற்கொண்டால், அது பல நல்ல விஷயங்களுக்கு அடிகோலும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தமக்கள் கருதுகிறார்கள்.
நீண்ட காலமாக பிரிந்து கிடக்கும் தலித் சமுதாயம் இதனால் ஒன்றுபடும், தலித் வாக்குகள் சிதறாமல், அப்படியேஒரே இடத்தில் குவியும், தமிழகத்தின் மிகப் பெரிய சக்தியாக தலித் வாக்கு உருவாகும் என்று அவர்கள்கருதுகிறார்கள்.
திமுக கூட்டணியில், திருமாவளவன் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று சமயநல்லூர். இந்தத்தொகுதியில்தான் முதலில் போட்டியிடுவதாக திருமாவளவன் திட்டமிட்டிருந்தார். அதன் காரணமாகவே,அவருக்கு இத்தொகுதியை கொடுத்தார் கருணாநிதி.
இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. செல்வராஜு, அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சரின் தொகுதியைப் பெற்ற திருமாவளவன் இப்போது அங்கு போட்டியிடுவதில்லை என முடிவுசெய்துள்ளார். காரணம் ஜாதிக் குழப்பம்தான்.
சமயநல்லூர் தொகுதியில் பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே திருமாவளவன் அங்குநின்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என கடைசி நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புமுடிவு செய்தது.
எனவே, தற்போதைய நிலவரப்படி மங்களூர் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் முடிவு செய்திருக்கிறார்.இது அவரது சொந்த தொகுதி என்பதோடு, பறையர் பிரிவு வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதியும் ஆகும்.
அதேபோல, பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
எது எப்படியோ தேர்தலுக்குப் பிறகாவது, இந்த இரு தலித் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்என்று தலித் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications