தேவையில்லாமல் திமுகவை விமர்சிக்கிறார் வைகோ: கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுகவை அல்லது மதிமுகவையோ கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டும்என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருக்கோவிலூரில் தேர்தல் பிரசாரம் செய்த கருணாநிதி கூறியதாவது:
தேவையில்லாமல் திமுகவை விமர்சனம் செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக அல்லது மதிமுகவை வைத்துக் கொள்ளும்படி பிரதமர் வாஜ்பாயிடம்வலியுறுத்தவுள்ளேன்.
திமுக - மதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் வைகோஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார். மதிமுகவுக்கு திமுக 18 தொகுதிகளை முதலில் வழங்கியது.
ஆனால் அதை நிராகரித்தார் வைகோ. அவர் மேலும் 3 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.அப்போது பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளதாகக்கூறினோம். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை. பின்னர் 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அப்புறம் வேண்டாத தொகுதிகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.அதனால்தான் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டுமானால் வெளியேறிக் கொள்ளலாம் என்றுகூறினோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மதிமுக எதிரணியாக இருந்து கொண்டு, மத்தியில் திமுக இடம்பெற்றுள்ள தேசியஜனநாயகக் கூட்டணியில் மதிமுக நீடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
சமீபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைப்பதே கருணாநிதியின் குறிக்கோள் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்தார். யார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறார்கள் என்பதைப்பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை விமர்சிப்பதை விட, குறை கூறுவதை விட மிக அதிகமாகவிமர்சிக்கிறார் வைகோ.
மதிமுகவில் செய்தித்தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்ததால் வைகோவின்கோபம் இன்னும் அதிகமாகக் கூடி விட்டது என்று பேசினார் கருணாநிதி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications