வங்கதேச பிரச்சனைக்கு உளவுத்துறை பொறுப்பல்ல
டெல்லி:
வங்கதேசப்படைகள் இந்தியாவிற்குள் ஊடுருவுவது குறித்து தகவல் தெரிவிக்க உளவுத்துறையினர் தவறிவிட்டதால் தான் தற்போது அங்கு இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படையினரிடையே மோதல் நடைபெறுகிறதுஎன்ற குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங் மறுத்துள்ளார்.
வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தபின் இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்புபடையினர் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து பிரச்சனை எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினரான மன்மோகன்சிங் இது குறித்து பேசும் போது, இந்தியாவின் நட்பு நாடுகளில்ஒன்றான வங்கதேச இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளை காக்க மத்திய அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.
வங்கதேச எல்லையை ஒட்டி உள்ள அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் உறுப்பினர்களும் எல்லையில்நடைபெற்று வரும் சண்டையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,
வங்கதேசம் இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 4000 கி.மீ.எல்லையில் 6 கி.மீ. மட்டும் பிரச்சனைக்குரியதாக உள்ளது.
அங்கு தான் தற்போது மோதல் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஏற்கனவே மத்திய அரசு வங்கதேச அரசிடம்எடுத்து கூறியுள்ளது. சண்டை நடக்கும் பகுதியில் முன்பிருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அங்கு குடியேற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய எல்லையில் வங்கதேச படைகள் ஊடுருவியது பற்றி இந்திய உளவுத்துறை தகவல் அளிக்காததால் தான்இத்தகைய மோதல் நடைபெறுவதாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் தவறானவை என தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications