வேட்புமனு ஏற்கப்படுமா? ஜெ. கருத்து
தேனி:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மனு தாக்கல் செய்தஅ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேட்புமனு ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனகூறினார்.
அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாகிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில்போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் மனுதாக்கல் செய்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா கூறுகையில்,அ.தி.மு.க.வெற்றி வாய்ப்பு பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.
வக்கீல் விஜயன் தொடுத்துள்ள வழக்கு பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. என் வேட்பு மனுஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
ஜெ.சுற்றுப்பயணம் ரத்து:
புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலத்தின் முன்பிருந்து தேர்தல்பிரசாரத்தை தொடங்கினார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவர் 51 ஊர்களில் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அவர் 40 ஊர்களில் பிரசாரம் செய்து முடித்த பின்திடீரென சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு மதுரை திரும்பி விட்டார்.
மதுரை அசோக ஹோட்டலுக்கு வந்த ஜெயலலிதா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எனது சுற்றுப்பயணம் மிக நன்றாக இருந்தது. புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்யாத பகுதிகளுக்கு மீண்டும் 8ம்தேதி வரும்போது செல்வேன் என்றார்.
சுற்றுப்பயணம் ரத்து ஆனதற்கான காரணம் என்ன என நிருபர்கள் கேட்டுக் கொண்டிருந்த போதே அந்தகேள்விக்கு பதிலளிக்காமல் ஜெயலலிதா ஹோட்டலுக்குள் சென்று விட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications