இந்திய-வங்கதேச எல்லையில் அமைதி திரும்பியது
கவுஹாத்தி:
இந்திய- வங்கதேசம் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து எல்லை பகுதியில் அமைதி திரும்பியது.
வங்கதேசத்தின் ரைபிள்ஸ் வீரர்கள், (பி.டி.ஆர்) வங்கதேச ராணுவ வீரர்கள் உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஷில்லாங்கிலிருந்து 100கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பிர்டிவா கிராமத்தை கைப்பற்றினர். 20 எல்லை பாதுகாப்புபடை வீரர்களையும் (பி.எஸ்.எப்)பணயக் கைதியாக பிடித்துச் சென்றனர்.
பி.டி.ஆர், வீரர்கள் பி.எஸ்.எப். முகாமையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். புதன்கிழமை இரவு முழுவதும் சண்டை தொடர்ந்தது.வியாழக்கிழமை காலையும் சண்டை நடந்தது. பிர்டிவா கிராமத்தில் வாழ்ந்து வந்த சுமார் 500 காஷி மலை ஜாதி மக்கள் உயிருக்குபயந்து அந்த கிராமத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இந்திய -வங்கதேச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் நடந்த பல சுற்று பேச்சு வார்தைக்கு பின் ஒப்பந்தம்ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் பி.எஸ்.எப்- பி.டி.ஆர் இடையே நடந்து வந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.எப்.காமண்டன்ட்டும் செய்தித் தொடர்பாளருமான சில்கோடி மேகாலய தலைநகரான ஷில்லாங்கில் நிருபர்களிடம்கூறுகையில், எல்லை பகுதியில் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. வங்கதேச துருப்புகள் இந்திய பகுதியிலிருந்து திரும்பி செல்லதொடங்கிவிட்டார்கள் என்றார்.
தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் கூறுவதாவது:
பி.டி.ஆர்.பிர்டிவா கிராமத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்தியா அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக வங்கதேசம் கூறும் பகுதியிலிருந்துபி.எஸ்.எப் வீரர்கள் வெளியேற வேண்டும் என கூறுகிறது.
பி.டி.ஆர். சண்டையில் கொல்லப்பட்ட 4 பி.எஸ்.எப் வீரர்களின் உடல்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனாலும் காணாமல் போன 11 பி.எஸ்.எப். வீரர்கள் நிலை என்னவானது என தெரியவில்லை. அவர்கள் பி.டி.ஆர். வீரர்களால்புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதகாவும் கூறப்படுகிறது
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அசாம், மான்காசார் பகுதியில் நடந்த சண்டையில் பி.டி.ஆர் 4 பி.எஸ்.எப் வீரர்கள்கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications