ஈரோடு: காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி
ஈரோடு:
சேலத்தைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டுநாள்களுக்குள் ஈரோட்டில் இரண்டு தொகுதிகளுக்கு காங்கிரசுக்கு இடம் கொடுக்காவிட்டால், இங்குள்ள பத்துத்தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் இப்போது அதிருப்திமுற்றுகிறது. சேலம்மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தது.
இதே போன்று தற்போது ஈரோடு மாவட்ட காங்கிரசும் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கடந்த 1984ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகாலமாக காங்கிரசை அதிமுக கூட்டணி புறக்கணித்து விட்டது. ஈரோடுமாவட்டத்தில் ஒரு இடம் கூட கொடுக்கவில்லை.
இது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தற்போதுஒதுக்கீடு செய்துள்ள தொகுதிகளை மறு பரிசீலனை செய்து எங்களுக்கு ஒரு தொகுதியாவது ஒதுக்க வேண்டும்.இல்லையென்றால், ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்.
இதற்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications