த.மா.க ஓட்டுக்களை தி.மு.க.விற்குப் பெற்றுத் தர சிதம்பரம்முயற்சி
கிருஷ்ணகிரி:
தேர்தல் பிரசாரம் செய்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் அனைத்தையும் திமுகவுக்குப் பெற்றுத்தருவேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவருமானப.சிதம்பம் கூறினார்.
கிருஷ்ணகிரித் தொகுதியில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தபிறகு அங்கு பிரசாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம்பேசியதாவது:
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்புமனுவை தள்ளுபடி செய்ய சதிநடக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசியுள்ளார். அப்படியென்றால், தேர்தல் கமிஷன்மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று தான் அர்த்தம்.
தேர்தல் கமிஷன், ஜனநாயக விதிமுறைகளின் படிதான் அனைவரையும் சரிசமமாக நடத்திக் கொண்டிருக்கிறது.சட்டத்திற்குப் புறம்பாக அது எந்த நிலையிலும் செயலாற்றாது என்பதே உண்மை. தேர்தல் கமிஷனையே குறைகூறுவது எந்தவிதத்திலும் அர்த்தமற்றது.
ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பிறகு தான் நல்லாட்சி வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளோம். அதற்குமுன்னர் அண்ணா, காமராஜர் ஆட்சியின்போது நல்லாட்சி நடந்ததால் நல்லாட்சியைப் பற்றி யாரும் நினைக்கவேஇல்லை.
தமிழ்மாநில காங்கிரசிற்கு ஏற்பட்டுள்ள நிலை மிக மோசமானது. தமிழ் மாநிலக் காங்கிரசின் ஓட்டுக்கள்அத்தனையும் பிரசாரத்தின் மூலம் திமுகவுக்குப் பெற்றுத் தருவேன் என்றார் ப.சிதம்பரம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications