ஆஸ்திரேலியாவில் நுழைந்த 24 இலங்கைத் தமிழர்கள் கைது
சிட்னி:
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 24 இலங்கைத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டனர்.ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு இவர்களை ஏமாற்றியகமிஷன் ஏஜெண்டுகளை போலீசார் தேடுகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கோரல் பே பகுதியயில் எக்ஸ்மெளத் நகரில் இவர்கள் சாலைகளில் திரிந்தபோதுகைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹெட்லாண்ட் துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
18 முதல் 50 வயது வரையிலான இவர்கள் கடும் குளிர், மழையில் ஒதுங்க இடமின்றி அலைந்து கொண்டிருந்தனர்.இவர்கள் உயிர் பிழைத்ததே அதிசயம் என்ற அளவுக்கு அங்கு காலநிலை நிலவுகிறது.
இவர்கள் இந்தோனேஷியாவிலிருந்து கப்பல் மூலமாக ஆஸ்திரேலியா வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் 4,000ஆஸ்திரேலிய டாலர்களை ஏஜெண்டுகள் வாங்கியுள்ளனர்.
கடும் குளிரில் சிக்கித் தவித்த இவர்கள் குளிர் காய்வதற்காக காயந்த சறுகுகளை வைத்து தீ வைத்தனர். ஆனால்,அந்தத் தீ பக்கத்தில் இருந்த புதர்களுக்குப் பரவி வீடுகளுக்கும் பரவி பெரும் சேதம் விளைவித்துவிட்டது. இவர்கள்மீது இது தொடர்பாகவும் ஆஸிதிரேய போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இவர்களிடம் இமிக்ரேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications