கருணாநிதி இன்று வேட்பு மனுத்தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான முதல்வர் கருணாநிதி, வேட்பு மனுத்தாக்கல் செய்யகடைசி நாளான திங்கள்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16-ம் தேதி துவங்கியது. இதுவரை 1077 பேர்வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருச்சி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 8 பேர் வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர்.

முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்து முடித்து விட்டனர். வேட்புமனுத்தாக்கல் செய்ய திங்கள்கிழமைதான் கடைசி நாளாகும்.

திங்கள்கிழமை சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.எழிலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை கருணாநிதிசமர்ப்பிக்கிறார். பின்னர் மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாகிறார்.

வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்படுகிறது. ஜெயலலிதாவின் வேட்பு மனு ஏற்கப்படுமாஎன்பது அன்றே தெரிந்து விடும். பின்னர் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ம் தேதி வரை அவகாசம்அளிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+