காலேஜ் டூ கோட்டை டூ ஜெயில்: மாஜி அமைச்சரின் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 77 லட்ச ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி திங்கள்கிழமைநீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பொன்னுச்சாமி. இவர் மீது வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்ததாக தனி நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பொன்னுச்சாமிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, தம்பிகள் வெங்கடேசன், ராஜப்பாஆகியோருக்குத் தலா ஒரு ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இவர்கள் அப்பீல் செய்தனர்.

இதில் பொன்னுச்சாமியைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். பொன்னுச்சாமிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து ஒரு லட்ச ரூபாய் அபராதமும்விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது. இதையடுத்து அவர் இரண்டாவது தனி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.அவரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி பி.தார்வேஷ் உத்தரவிட்டார்.

தனி நீதிமன்றத்தில் இதுவரை 18 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. முதன் முதலாக சென்னை உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்திய வழக்குபொன்னுச்சாமியுடையது தான். பேராசிரியராகப் பணியாற்றிய பொன்னுச்சாமிக்கு முதல் வகுப்பு சிறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+