சைதை கிட்டு சுகவீனம் .. தேர்தலில் போட்டியில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை சடடசபைத் தொகுதி திமுக வேட்பாளர் சைதை கிட்டு திடீரென உடல் நலமில்லாமல்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அத்தொகுதியில் திமுக வேட்பாளராக வை.பெருமாள்போட்டியிடவுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நெருக்கமான வட்டாரத்தில் முக்கியமானவர் சைதை கிட்டு. திமுகவேட்பாளராக சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். இந்த முறையும் கிட்டு சைதாப்பேட்டைதொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், சைதை கிட்டு திமுகவேட்பாளராக சைதாப்பேட்டை தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், திடீரென உடல் நலம்குன்றி ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் கணிப்புப்படி இன்னும் ஒரு மாதத்திற்குத் தன்னால் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியாதுஎன்பதால், தனக்குப் பதில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்குமாறு கிட்டு கோரியுள்ளார். அதை ஏற்றுதிமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் வை.பெருமாள் சைதாப்பேட்டைதொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் அன்பழகன்.

சைதை கிட்டு, கருணாநிதியின் மனம் கவர்ந்தவர். அதனால்தான் சைதாப்பேட்டை தொகுதியில் தனது தேர்தல்பிரசாரத்தைத் தொடங்கினர். சைதை கிட்டு, செயலில் சிட்டு என கருணாநிதியால் பாராட்டப் பட்டவர் கிட்டு என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+