ஜெயாவை எதிர்த்துப் போட்டியில்லை.. தாமரைக்கனி பல்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தாமரைக்கனி அந்த முடிவைக்கைவிட்டுவிட்டார்.

முன்பு திட்டமிட்டபடி தனது சொந்த தொகுதியான ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே போட்டியிட உள்ளார். இங்கு அவரைஎதிர்த்து அதிமுக சார்பில் தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்ட தாமரைக்கனிக்கு சீட் கொடுக்க ஜெயலலிதாமறுத்துவிட்டார். இதனால், தாமரைக்கனி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

தனக்கு சீட் தராத ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியிலும் போட்டியிடப் போவதாக அவர்அறிவித்திருந்தார்.

ஆனால், அதிமுகவின் கோட்டையான ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட வேண்டாம் எனஅவரது நலம் விரும்பிகள் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக தனதுமுடிவிலிருந்து அவர் பின் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது.ஜெயலிதாவின் மனு எப்படியும் தள்ளுபடி ஆகிவிடும். எனவே அங்கு போட்டியிட்டு கூடுதலாக பாரம் சுமக்கவிரும்பவில்லை என தாமரைக்கனி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+