தேர்தல் அதிகாரிகளாகும் திமுக ஆதரவு அதிகாரிகள்- வைகோ புகார்
திருச்சி:
திமுக ஆதரவு அதிகாரிகளையே தமிழக அரசு தேர்தல் அதிகாரிகளாக நியமித்து வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
திங்கள்கிழமை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய வைகோ பேசினார். அவர் கூறுகையில், சென்னை ஆயிரம் விளக்குதொகுதியில் கருணாநிதியின் மகன் ஸ்டாலினை எதிர்த்து மதிமுக சார்பில் மல்லிகா தயாளன் போட்டியிடுகிறார்.
அவரிடம் தேர்தல் விண்ணப்படிவமான பார்ம்- ஏவில் 6 இடங்களில் கையெழுத்துப் போட சொல்லி வாங்கியிருக்கிறார் அந்தத்தொகுதிக்கான தேர்தல் அதிகாரி. இது எங்கள் சின்னமான பம்பரம் சின்னத்தை அவருக்குக் கிடைக்காமல் செய்வதற்காகசெய்யப்பட்ட யுக்தியாகும்.
இது போன்ற தேர்தல் மோசடிகள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஆயிரம் விளக்கு தொகுதிதேர்தல் அதிகாரியை தேர்தல் கமிஷன் உடனடியாக நீக்க வேண்டும். அவரைப் போல தவறு செய்யும் பிற அதிகாரிகளையும் நீக்கவேண்டும்.
அதே போல சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து மதிமுக சார்பில் குமாரி விஜயகுமார் போட்டியிவார் எனஅறிவித்தோம்ர். குமாரி சென்னையில் ஒரு மிகப் பெரிய மருத்துவனையில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
போட்டியிலிருந்து விலகாவிட்டால் வேலையை விட்டு நீக்கப் போவதாக குமாரியை அந்த மருத்துவமனை மிரட்டியது. கருணாநிதியின்தூண்டுதலின்பேரில் தான் இந்தச் செயலில் மருத்துவனை நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். ஆனால், இந்த மிரட்டல்களை எல்லாம் மீறிதான் போட்டியிடப் போவதாக குமாரி தெரிவித்தார்.
ஆனால், குமாரி விஜயகுமார் வீணாக கஷ்டத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதால், அவருக்கு பதிலாக கருணாநிதியை எதிர்த்துகவிதமிழ்மறவனை நிறுத்தியுள்ளோம்.
நான் அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவதாக கருணாநிதி பொய் சொல்கிறார். உண்மையில் அவர் தான் காங்கிரசுடன்கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு சோனியாவுக்கு ஆள் அனுப்பினார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டே இந்தச் செயலில்கருணாநிதி ஈடுபட்டார் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications