ஆள் வைத்துக் கணவனை கொன்ற இந்தியப் பெண்
டர்பன்:
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் தொழிலதிபர் வாடகைக்கு ஆள் வைத்து தன் கணவனைக் கொன்ற சம்பவம் அந்நாட்டு இந்தியசமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
35 வயதான ரஸியா ரஜாப் என்ற அந்தப் பெண், எண்பது வயதான தன் கணவன் அக்ரம் ரஜாப்பைக் கொல்வதற்கு தன் உறவினர் தாண்டி ரெஜாய்ஸ் சிபிஸிஎன்பவரின் உதவியை நாடினார், இதற்காக தனக்கு 75,000 ராண்ட்ஸ் கொடுக்கப்பட்டதாக கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில் தாண்டி ஒப்புக் கொண்டார்,
ரஜாப் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்த தாண்டியின் உறவினரான அபட்நேகோ துமிசானி சிபிஸி என்பவர்தான் அக்ரமைக் கத்தியால் குத்திக்கொன்றதாகக் கூறப்படுகிறது, இதற்காக துமிசானிக்குக் கொடுக்க வேண்டிய 75,000 ராண்ட்ஸ் கொடுக்கப்படவில்லை என்றும் தாண்டி கூறினார்,
தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டை மறுத்த துமிசானி, கொலை நடந்த அதே நேரத்தில் அவர் தன் தோழியுடன் இருந்ததாகக் கூறினார்,ஆனால், அந்தத் தோழி இப்போது எங்கே என்று தெரியவில்லை,
ரஸியா ராஜப்பும் தன் மேல் சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை மறுத்தார், கொலை பற்றி கோர்ட்டில் சாட்சியங்கள் கூறிய சம்பவங்கள் தனக்குஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார்,












Click it and Unblock the Notifications