தேர்தல் அதிகாரிகளுடன் ஜெ. வழக்கறிஞர்கள் விவாதம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனு மீதான பரிசீலனை முடிந்தது.
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சித்தார்த் ரே தலைமையிலான குழு, இந்த பரிசீலனையில் கலந்து கொண்டு, பல அடுக்கடுக்கானவாதங்களை எடுத்து வைத்துள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட கிருஷ்ணகிரிஉள்பட 4 இடங்களில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் மனு பரிசீலனையின்போது சித்தார்த் தலைமையிலான வழக்கறிஞர் குழு தேர்தல் அதிகாரி மதிவாணனிடம்தங்களது வாதங்களை எடுத்துரைத்தது.
தேர்தல் மனுவை ஏற்றுக் கொள்ள தேவையான ஆதரங்களையும் எடுத்து வைத்தது. 11 பக்க ஆதரங்கள், நீதிமன்ற தீர்ப்புகள்ஆகியவற்றை எடுத்து வைத்து வாதாடியது. இதனையடுத்து, இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையில் தேர்தல் அதிகாரி உள்ளார்.
மனுவை ஏற்றுக் கொள்வது தொடர்பான முடிவு மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற தொகுதிகளிலும் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர்களும் கட்சியினரும் தேர்தல் அதிகாரிகளுடன் வாதாடினர். 4தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் மனு ஏற்கப்படுமா இல்லையா என்பது சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications